425.00
சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது. 450 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில்தான் கடலை எண் ணெய் கொதிக்கும் என்பதால் பண்டங்கள் சமைக்க ஏற்றது கடலை எண்ணெய். வறுத்தெடுக்கும் உணவுகள் செய்ய கடலை எண்ணெய் சிறந்தது.
நிலக்கடலை என வழக்கு மொழியில் வழங்கப்படும் வேர்க்கடலை மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. தற்போது வெப்பமண்டல பகுதிகளான சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா பகுதிகளில் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராக பயிரிடப்படுகிறது. இதன் பருப்புகளில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
கடலை எண்ணெய் என்பது வேர்கடலையை நசுக்கி வடிகட்டி எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இந்த கடலை எண்ணெய் தான் சமையலில் அதிகம் பயன் படுத்தப்படும் எண்ணெய் ஆகும். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட பின்னர் இளம் மஞ்சள் நிறமாக இருக்கும். கடலை எண்ணெய் தான் பொறித்து எடுக்க உகந்த எண்ணெய் ஆகும். இதன் கொதிநிளையானது 230 டிகிரியாகும் எனவே இது தான் பாதுகாப்பான சிறந்த எண்ணெய்.
கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரி சக்தி கிடைக்கிறது.
அதிக அளவில் லிப்பிடுகள் நிறைந்தது. பூரிதமான கொழுப்புகள் உடலில் சேரவும், கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உடலில் சேராமல் காக்கவும் உதவுகிறது.
‘ஒமேகா 6’ எனப்படும் கொழுப்பு அமிலம் நிறைந்தது கடலை எண்ணெய். ‘பீட்டா சிட்டோஸ்டிரால்’ எனும் துணை ரசாயன பொருள் கடலை எண்ணெயில் உள்ளது. இது கொலஸ் டிராலை அகற்றும் தன்மை கொண்டது. கடலை எண்ணெயில்’வைட்டமின்-இ’ அதிகம் உள்ளது.
இதில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. போலிக் அமிலம் குறைவாக இருந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைந்து விடும். இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச் சத்துக் குறைவதால் இரத்த சோகை நோய் ஏற்படும்.
மேலும், போலிக் அமிலம் கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் தவறாது கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால், மகப்பேறு எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நீரிழிவு நோய் ஏற்படுவதை தவிர்க்கிறது. இதில் மாங்கனீசு சத்து அதிகம் உள்ளது. மாவுச் சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்கனீசு பெரும் பங்காற்றுகிறது.
நிலக்கடலையில் உள்ள ரெஸ்வாரட்ரால் என்ற சத்து இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இளமைத் தோற்றத்தை நீண்ட நாட்கள் பராமரிக்கிறது. கடலை எண்ணெயில் உள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி, ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகிறது. ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக தருகிறது. மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டி, நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
| Weight | 500 g |
|---|
Sweet, and flavorful Groundnut oil is organic edible oil obtained from pressing Groundnut kernels. Groundnut s are believed to be originating in Central American region from where they spread to other parts of the world by Spanish explorers. Today, Groundnut s are widely cultivated as important oil seeds and a prime commercial crop in China, India, African nations, and the United States of America.
Groundnut is also known as goober, pinder, peanut, earthnut and ground pea. Groundnut oil is natural sweet and flavoured edible oil. Refined groundnut oil has a light yellow color and a neutral taste. This is extracted from pressing Groundnut kernels. In addition to extracting the oil, Groundnut s are eaten raw or roasted, and used in cooking and bakery as well. Groundnut oil is very high on energy, has a very high burning and smoking point, and contains monounsaturated fats, Vitamins A, D and E.
A groundnut oil massage can energize your body and help to get rid of joint problems. This gives great relief to aching joints and muscles when used on a daily basis. Groundnut oil contains Vitamin E that is excellent for skin protection and better health.
Groundnut oil is very high in calories because of the fatty acid content. But, this oil is rich in mono-unsaturated fatty acids (MUFA) that lower “bad cholesterol” and increase “good cholesterol” in the blood. This helps to prevent coronary artery disease and heart attacks by maintaining a healthy blood lipid profile. This is the most popular Groundnut oil benefit of all.
Groundnut oil contains linoleic acid that is a precursor of prostaglandins. Prostaglandin is required to carry out many important functions in the body such as the contraction and dilation of blood vessels and other muscles of the body.
Groundnut cooking oil should be included in a moderate quantity in your daily diet to maintain proper levels of cholesterol and for heart health.
Groundnut oil contains monounsaturated fats that are useful to lower high blood pressure. This indirectly helps to reduce the risk of heart diseases
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.