பேரன்புடையீர் வணக்கம்!
“குட்டி ஜப்பான்” என்றழைக்க்ப்படும் சிவகாசி நகரில் நமது உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் விதமாக இனியதோர் உதயம் காரோஸ் மரச்செக்கு எண்ணெய்கள். மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினாலான மரச்செக்கில் பாரம்பரிய முறைப்படி முதல் தரமான வித்துக்களை கொண்டு ஆட்டப்பட்டு, பாரம்பரிய முறைப்படி வடிகட்டிய நல்லெண்ணெய், கடலை எண்ணெய், மற்றும் தேங்காய் எண்ணெய் மனித உடலுக்கு மிகவும் நல்லது. நாம் சமையலுக்கு பயன்படுத்திவரும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களைப் (Refinedoil) பற்றிய தன்மைகள், சுத்திகரிக்கப்படும் முறைகள் மற்றும் அவற்றின் நச்சுத்தன்மைகள் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் நாம் அறிந்ததே. இதற்கு மாற்றாக நம் பாரம்பரிய முறைப்படி மரச்செக்கில் தயாரிக்கும் எண்ணெய்களே நம் உடல் நலத்திற்குச் சிறந்தது.
அறிமுகம்
நேரத்தைக் குறைக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் கண்டுபிடிக்கப்பட்டதுதான் நவீன இயந்திரங்கள் (Expiller). இதன் மூலம் தயாரிக்கும் எண்ணெய் அதிக வெப்பம் மற்றும் சுத்திகரிப்புக்கு (Refined) உட்படுத்தப்படும் போது உடலுக்கு நன்மையளிக்கும் சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. குறைந்த விலைக்கு விற்பதற்காக வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு, கலப்படம் செய்யப்படுகின்றது. இதனாலேயே மரச்செக்கின் பயன்பாடு மறைக்கப்பட்டு அழிந்து போகும் நிலையில் உள்ளது. எனவேதான் இன்றைய தலைமுறையினருக்கு மரச்செக்கை மறுஅறிமுகம் செய்வது மிக அவசியம்.
பண்டைய காலங்களில் நம் முன்னோர்கள் எண்ணெய்களை உற்பத்தி செய்ய மரத்தாலான செக்குகளையே பயன்படுத்தினர். மரச்செக்கின் உரல் மற்றும் உலக்கையானது மருத்துவ குணம் கொண்ட வாகை மரத்தினால் செய்யப்பட்டது. எண்ணெய் வித்துக்கள் ( எள், நிலக்கடலை, தேங்காய்) மரச்செக்கில் நசுக்கப்படும் போது அவற்றில் உள்ள இயற்கையான ஊட்டச்சத்துக்கள் முழுவதுமாக நமது உடலுக்கு கிடைக்கிறது.
எண்ணெய் தயாரிக்க மரச்செக்கை உபயோகிப்பதால் உராய்வினால் ஏற்படும் வெப்பம் வெகுவாக குறைக்கப்படுகின்றது. இரும்பாலான செக்கு மற்றும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தும்போது வெப்பம் அதிகரிக்கின்றது. எனவே அதிகப்படியான வெப்பத்தினால் எண்ணெய் வித்துக்களில் உள்ள இயற்கை ஊட்டச்சத்துக்கள் வெகுவாக குறைக்கப்படுகின்றது.
